Wednesday, January 15, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகளனி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் திடீர் மரணம்

களனி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் திடீர் மரணம்

களனி பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று அதன் நிர்வாக கட்டிடத்திற்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

களனி பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (24) இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், குறித்த மாணவனை வைத்தியசாலையில் அனுமதிக்க அம்புலன்ஸ் வசதியோ அல்லது வேறு வாகனமோ பல்கலைக்கழகத்தில் இல்லாத காரணத்தினால், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இதன்படி, பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்திற்கு முன்பாக சுமார் 150 மாணவர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles