இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தை இன்று (25) காணும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 10.23 மணி முதல் பிற்பகல் 03.02 மணி வரை சந்திரகிரகணம் தெரியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞானப் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பகல் வேளையில் சந்திர கிரகணம் ஏற்படுவதால் இலங்கையர்கள் அதனை காண முடியாது.
ஆனால் அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், தெற்கு நோர்வே மற்றும் சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் அதனை காண முடியும்.