உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகளுடன் குற்றச் செயல்களில் ஈடுபடத் தயாராக இருந்த நபரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
விசேட அதிரடிப்படை கண்டி முகாமின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று (24) மேற்கொண்ட சுற்றவளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகளை சட்டவிரோதமான முறையில் தம்வசம் வைத்திருந்து குற்றச் செயல்களில் ஈடுபடத் தயாரான தலாத்துஓயா, துல்முரே பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டார்.
மேலதிக விசாரணைகளுக்காக அவர் தலாத்துஓயா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.