முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (25) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளார்.
கண்டியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இடம்பெற்ற நிகழ்வில் ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் பற்றிய தகவல்கள் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.