ரத்மலானே குடு அஞ்சுவின் உதவியாளர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது அவர் செய்யப்பட்டார்.
இதன்போது, அவரிடமிருந்து 55 கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், கைப்பேசி, இலத்திரனியல் தராசு மற்றும் 15,000 ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளன.
46 வயதுடைய ரத்மலானை பகுதியைச் சேர்ந்த ரோசா என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கல்கிசை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.