ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது அவர் தலைமையில், பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டிலுள்ள சுமார் 270 ஏக்கர் அளவிலான காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவர் பருத்தித்துறை, மந்திகை வைத்தியசாலைகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்களையும் திறந்து வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.