பாகிஸ்தானின் பிரதமரான ஷேபாஸ் ஷெரீப் தலைமையிலான புதிய அமைச்சரவை தமது வேதனம் மற்றும் அனைத்து சலுகைகளையும் கைவிட முடிவு செய்துள்ளது.
நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
பாகிஸ்தானில் தேவையற்ற செலவுகளை குறைக்கும் நோக்கில், பிரதமர் உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏகமனதாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்க நிதியிலான வெளிநாட்டு பயணங்களை நிறுத்துவது மற்றும் குறைப்பது தொடர்பாக பிரதமருக்கும் அமைச்சரவைக்கும் இடையில் உடன்பாடும் எட்டப்பட்டுள்ளது.