அனுராதபுரத்தில் உள்ள நுவர வாவியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலத்தில் பல இடங்களில் காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 35 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர் என்பதுடன் அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
நேற்று (20) பிற்பகல் நுவர வாவியின் ஊடாக நடந்து சென்ற நபர் ஒருவர் சடலத்தை பார்த்து பொலிஸ் உயிர்காப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் மீட்புக் குழுவினர் குறித்த நபரின் சடலத்தை மீட்டுள்ளனர்.
அதனையடுத்து, அனுராதபுரம் தலைமையகப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, தலைமையகப் பொலிஸாரின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பிரேத பரிசோதனையின் பின்னர், சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.