வெள்ளவத்தில் பேருந்து கவிழ்ந்ததில் பாடசாலை மாணவர்கள் உட்பட 15 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெல்லவாய தனமல்வில பிரதான வீதியில் வெல்லவாய குமாரதாச சந்திக்கு அருகில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் இன்று (21) காலை இந்த விபத்து இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
7 பாடசாலை மாணவர்கள் மற்றும் சாரதி உட்பட 8 பேர் சிகிச்சைக்காக வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாரதியின் அவசர நிலை காரணமாகவே பேருந்து கவிழ்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட நோயாளர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதோடு விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


