மோட்டார் சைக்கிளில் போதைப்பொருள் விநியோகம் செய்த தம்பதியரில் பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், மாதம்பே – தும்மலசூரிய விலத்தவ வீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், இளைஞர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்டதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் யுவதியை கைவிட்டு பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இவர்கள் இருவரும் சில காலமாக போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வருவதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்.
விலத்தாவ பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த யுவிதியை சோதனையிட்டபோது, அவரிடமிருந்து ஏராளமான ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.