வரி செலுத்தாமல் இலங்கைக்கு கடத்தப்பட்ட சிகரெட் தொகையுடன் நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கைகளுடன் இணைந்து, விசேட அதிரடிப்படையினர் நேற்று (19) மெதகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பக்கினிகஹவெல பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் சோதனை மேற்கொண்டனர்.
அங்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1200 சிகரெட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெதகம பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மெதகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.