Sunday, April 20, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டு2 கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குகளுடன் குருக்கள் ஒருவர் கைது

2 கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குகளுடன் குருக்கள் ஒருவர் கைது

மட்டக்களப்பு நகரில் உள்ள இந்து ஆலையம் ஒன்றில் பணியாற்றும் குருக்கள்ஒருவர் வலம்புரி சங்குகளுடன் விசேட அதிரடிப்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, முல்லைத்தீவு விசேட அதிரடிப்படை முகாம் பெறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் நேற்று பகல் குறித்த ஆலயத்துக்கு அருகில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது வலம்புரிசங்கு விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குருக்களை மடக்கிபிடித்து கைது செய்ததுடன் சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான 2 வலம்புரிச் சங்குகளை மீட்டனர்.

52 வயதான குருக்களையும் கைப்பற்றப்பட்ட சான்று பொருட்களும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles