Sunday, April 20, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டு14 வயது சிறுமியை வன்புணர்ந்த 9 பேர் கைது

14 வயது சிறுமியை வன்புணர்ந்த 9 பேர் கைது

சிறுமியை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த 9 குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுராதபுரம் நகரிலுள்ள சிகையலங்கார நிலையத்தில் வைத்து சிறுமி தொடர்ந்து பலாத்காரம் செய்யப்பட்டதாக அனுராதபுரம் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது.

14 வயதுடைய குறித்த சிறுமி அந்த இடத்திற்கு அடிக்கடி வந்து செல்வது குறித்து அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

அதன்படி, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், பாதிக்கப்பட்ட சிறுமியை பொலிஸ் காவலில் எடுத்து அவரிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேக நபர்களை கைது செய்தனர்.

19, 61, 52, 35, 40, 34 மற்றும் 48 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிசார் நடத்திய விசாரணையில் குறித்த இடத்தில் இந்த சிறுமி பல சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles