Sunday, June 21, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஷிரான் பாஷிக்கின் பிரதான சீடர் ஐஸுடன் கைது

ஷிரான் பாஷிக்கின் பிரதான சீடர் ஐஸுடன் கைது

பிரபல போதைப்பொருள் வர்த்தகரான ஷிரான் பாஷிக்கின் பிரதான சீடர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கையுடன் இணைந்து நேற்று (14) தெஹிவளை பொலிஸ் பிரிவில் சுமுது ராஜபக்ஷ மாவத்தை விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக உள்ள வீதியில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது 10 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன், தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் பயணித்த முச்சக்கர வண்டி மற்றும் கையடக்கத் தொலைபேசி போன்றன கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த நபர் தற்போது வெளிநாட்டில் உள்ள ஷிரான் பாஷிக்கின் பிரதான சீடன் எனவும், தெஹிவளை பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்டு வரும் நபர் எனவும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles