இவ்வருடம் அரச வெசாக் விழாவை மாத்தளை மாவட்டத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் நேற்று (14) மாத்தளை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
அதன்படி, இந்த ஆண்டுக்கான அரச வெசாக் விழாவின் ஆரம்ப விழா மாத்தளை தர்மராஜா பிரிவென் வளாகத்தில் நடைபெற உள்ளது.
இதன் நிறைவு விழாவை மாத்தளை அனுருத்த அரனேயில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.