அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 15 பேர் இலங்கை கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர் .
அவர்கள் யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
இந்தியா – நாகபட்டினத்தை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
குறித்த மீனவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.