Friday, March 14, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவட்டுக்கோட்டை சந்தியில் விபத்து - முச்சக்கர வண்டி சாரதி தலையில் காயம்

வட்டுக்கோட்டை சந்தியில் விபத்து – முச்சக்கர வண்டி சாரதி தலையில் காயம்

வட்டுக்கோட்டை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இன்று காலை காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து வட்டுக்கோட்டை சந்தியை கடக்க முற்பட்டது.

இதன்போது அராலி தெற்கு பக்கத்தில் இருந்து வந்த, வெதுப்பக பொருட்கள் விற்பனை செய்யும் முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகேயுள்ள வெற்றுக் காணியினுள் இருந்த கற்களின் மேல் பாய்ந்தது.

இதனால் முச்சக்கர வண்டியின் சாரதி தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles