Sunday, June 21, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகனடா செல்ல விருப்பமின்மையால் தவறான முடிவெடுத்த நபர்

கனடா செல்ல விருப்பமின்மையால் தவறான முடிவெடுத்த நபர்

மாற்றுத் திறனாளி ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்று முன்தினம் (11) கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார்.

அக்குடுவன – கொல்லங்கலட்டி – தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த தனபாலசுப்பிரமணியம் சுஜீவன் (வயது 32) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபரின் சகோதரி ஒருவர் கனடாவில் வசித்து வருவதாகவும், குறித்த நபருக்கும், அவரது தாயாருக்கும் கனடாவுக்கான சுற்றுலா விசா கிடைத்துள்ளதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அவருக்கு கனடா செல்வதில் விருப்பம் இல்லாததால், தனது சக்கர நாற்காலியை கிணற்றுக்கு அருகே நிறுத்திவிட்டு அவர் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.

அவரது சடலம் மீட்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles