Wednesday, May 21, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்திலிருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் பலி

பேருந்திலிருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் பலி

கொழும்பு – பதுளை பிரதான வீதியின் பலாங்கொடை அளுத்நுவர பிரதேசத்தில் இபோச பேருந்திலிருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் இன்று (12) உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் 72 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறையிலிருந்து மஹியங்கனை நோக்கிச் சென்று கொண்டிருந்த இபோச பேருந்தின் படிக்கட்டிலிருந்து விழுந்த அவர், பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலாங்கொடை மாமல்கஹா பிரதேசத்தில் உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு பொலன்னறுவைக்கு திரும்புவதற்காக பாணந்துறை பேருந்தில் பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles