Sunday, November 17, 2024
27.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅதிரடியாக ரத்து செய்யப்படவுள்ள வர்த்தமானி அறிவித்தல்

அதிரடியாக ரத்து செய்யப்படவுள்ள வர்த்தமானி அறிவித்தல்

மீள் ஏற்றுமதிக்காக மிளகு உட்பட பல மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வகையில் அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நேற்று (11) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு தனது எதிர்ப்பை வெளியிட்டார்.

குறிப்பாக மீள் ஏற்றுமதிக்காக இந்த வாசனை திரவியங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பது உள்நாட்டு வாசனை பொருள் விவசாயிகளை ஊக்கமிழக்க செய்வதாகவும் அதனால் உள்நாட்டு வாசனை பொருட்களின் சாகுபடி வீழ்ச்சியடையும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது உலகின் சிறந்த வாசனைப் பொருட்கள் வர்த்தகநாமங்களில் முதலிடம் வகிக்கும் இலங்கையின் வாசனைப் பொருட்களின் தரத்தில் இது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயங்களை கருத்திற்கொண்டு ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துவதற்கும் இலங்கைக்கு மீள் ஏற்றுமதிக்காக வாசனைப் பொருட்களை இறக்குமதி செய்வதை இடைநிறுத்துவதற்கும் தீர்மானித்ததாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles