92 சதவீதமான சானிட்டரி நாப்கின்களுக்கு வரி அறவிடப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நேற்று (11) மாலை தல்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிற்கு தேவையான 92 வீதமான சானிட்டரி நாப்கின்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதாகவும் அதற்கு வரி அறவிடப்படுவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் எஞ்சிய 8% பொருட்களை உற்பத்திப் பொருட்களாக ஒரு நிறுவனம் இலங்கைக்குக் கொண்டுவருவதாகவும் அதற்கு 22.5% வரியே அறவிடப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.