Saturday, September 13, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயுக்திய நடவடிக்கையின் கீழ் 1,101 பேர் கைது

யுக்திய நடவடிக்கையின் கீழ் 1,101 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கைகளில் 1,101 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் தொடர்பான 1,030 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருந்த 71 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 1,101 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நடவடிக்கைகளில் இருந்து 427 கிராம் 937 மில்லிகிராம் ஹெரோயின், 294 கிராம் 196 மில்லிகிராம் ஐஸ், 39 கிலோகிராம் 206 கிராம் கஞ்சா, 448 கிராம் 11 மில்லிகிராம் மாவா, 34 கிராம் 495 மில்லிகிராம் தூல், 82 கிராம் 85 மில்லிகிராம் மதன மோதகம், 884 மாத்திரைகள் மற்றும் 50 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 1030 சந்தேக நபர்களில் 46 சந்தேகநபர்கள் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் போதைக்கு அடிமையான 17 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 43 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles