Tuesday, January 20, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிக்கு கொலை: பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் சந்தேக நபர் பலி

பிக்கு கொலை: பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் சந்தேக நபர் பலி

கம்பஹா – மல்வத்துஹிரிபிட்டியவில் உள்ள விகாரை ஒன்றில் பிக்கு ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான பிரதான சந்தேக நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சந்தேக நபர் பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த போதே இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

அத்தனகல்ல – யதவக்க பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை தேட சென்ற போதே, சந்தேக நபர் பொலிஸ் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த சந்தேக நபர் அரலகங்வில பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவராவார்.

கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி மல்வத்துஹிரிபிட்டிய – ஸ்ரீ ஞானராம விகாரையில் இருந்த பிக்கு மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles