மாத்தறையில் இருந்து மட்டக்களப்பிற்கு விற்பனைக்காக கடத்தி கொண்டுவரப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியன வலம்புரி சங்குடன் பௌத்த தேரர் ஒருவர் உட்பட இருவரை மட்டு கல்குடா பிரதேசத்தில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
தாண்டியடி விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் கல்குடா தபால் கந்தோருக்கு அருகாமையில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன்போது அங்கு பௌத்த தேரர் உட்பட இருவர் வலம்புரிசங்கு ஒன்றை விற்பனைக்காக கடத்தி வந்ததை அவதானித்த விசேட அதிரடிப்படையினர் அவர்களை சுற்றிவளைத்து மடக்கிபிடித்து கைது செய்ததுடன் ஒரு கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்கு ஒன்றை மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் சான்று பொருளான வலம்புரி சங்கையும் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளதாவும் இவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.