Sunday, May 11, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை மத்திய வங்கியின் மொத்த கையிருப்பு அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கியின் மொத்த கையிருப்பு அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி கடந்த ஜனவரி மாத இறுதிக்குள் நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 4,500 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

இந்த உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களில், சீனாவின் மக்கள் வங்கியின் 1.4 பில்லியன் டொலர் அந்நியச் செலாவணி வசதியும் அடங்கும்.

இதேவேளை, அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது பயன்படுத்தக்கூடிய அந்நிய செலாவணி கையிருப்பின் அளவு 3 பில்லியன் டொலர்களை தாண்டியுள்ளதாக தெரிவித்தார்.

“2022 ஏப்ரல் நடுப்பகுதியில் 20 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் குறைவாக இருந்த பயன்படுத்தக்கூடிய அந்நிய செலாவணி கையிருப்பு அளவு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது” என்று ஜனாதிபதி கூறினார்.

மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்பதற்கான முக்கிய காரணம் உள்நாட்டு மற்றும் அந்நிய செலாவணி சந்தைகளில் இருந்து அந்நிய செலாவணியை நிகர அடிப்படையில் கணிசமான அளவில் வாங்குவதே என்று மத்திய வங்கி சுட்டிக்காட்டுகிறது.

ஒட்டுமொத்தமாக, இலங்கை மத்திய வங்கி இந்த ஆண்டு ஜனவரியில் நிகர அடிப்படையில் சுமார் 245 மில்லியன் அமெரிக்க டொலர்ககளை பெற்றுக்கொண்டது குறிப்பிடதக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles