Monday, March 16, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை - மகன் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை – மகன் பலி

கொழும்பு ஹைலெவல் வீதியின் கொஸ்கம மிரிஸ்வத்த பகுதியில் நேற்று (08) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த சீமெந்து ஏற்றி சென்ற லொறியொன்றின் சக்கரம் திடீரென வெடித்ததில் , லொறி வீதியை விட்டு விலகி எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்த தாய் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொஸ்கம, அலுபோடல பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய தந்தையும் 8 வயது சிறுவனும் உயிரிழந்துள்ளனர்.

லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles