வெளிநாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி 785,000 ரூபா பண மோசடி செய்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
பலாங்கொடை – மெந்தகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 41வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர் சுவிட்சர்லாந்தில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி ஒருவரிடம் 785,000 ரூபா பணம் பெற்றுள்ளதுடன், அதற்கு மேலதிகமாக 25 நபர்களிடம் பணம் பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பலாங்கொடை காவற்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பலாங்கொடை மேலதிக நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்த போது, அவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.