Monday, April 21, 2025
27.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டு'ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றிய சதி' - புத்தகம் வெளியிடும் கோட்டா

‘ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றிய சதி’ – புத்தகம் வெளியிடும் கோட்டா

ஜனாதிபதி பதவியிலிருந்து தாம் வெளியேற்றப்பட்டதற்கு காரணமான போராட்டங்கள் தொடர்பான புத்தகம் ஒன்றை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவினரின் பங்களிப்புடன், குறிப்பாக இலங்கையில் ஜனநாயகத்தை குழிபறிக்கும் வகையில் செயற்படும் வெளிநாட்டுக் கட்சிகளால், ஜனாதிபதி பதவியில் இருந்து அவரை வெளியேற்றுவதற்கான சதித்திட்டம் குறித்தே அவர் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.

பல சமூக ஊடக இடுகைகளின்படி, ‘ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றிய சதி’ என்ற குறிற்த புத்தகம் நாளை 7 ஆம் திகதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை இந்த புத்தகம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles