Tuesday, May 6, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹெரோயின் கடத்திய தம்பதி கைது

ஹெரோயின் கடத்திய தம்பதி கைது

போலி இலக்கத் தகடுகளுடன் மோட்டார் சைக்கிளில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கைகளுடன் இணைந்து எடேரமுல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குறிதத் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வத்தளை – எடேரமுல்ல – அக்பர் டவுன் பகுதியில் நேற்று (05) விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

போலி இலக்கத் தகடுகளுடன் மோட்டார் சைக்கிளில் 25 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கொண்டு செல்லும்போது வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஆணும் 43 வயதுடைய பெண்ணும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களிடம் இருந்து 02 கையடக்கத் தொலைபேசிகள், 02 கடவுச்சீட்டுகள், டிஜிட்டல் இலத்திரனியல் தராசுஎன்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக தம்பதி எடேரமுல்ல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles