Saturday, May 3, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொத்துஹெர பகுதியில் கோர விபத்து: மூவர் பலி

பொத்துஹெர பகுதியில் கோர விபத்து: மூவர் பலி

கொழும்பு – குருநாகல் வீதியில் பூலோகொல்ல சந்திக்கு அருகில் நேற்று (05) இரவு கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

குருணாகலிலிருந்து கொழும்பு நோக்கி மரக்கறி ஏற்றிச் சென்ற லொறியுடன் எதிர்திசையிலிருந்து வந்த முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 04 பேர் படுகாயமடைந்து குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் குருணாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

பொத்துஹெர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles