நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடுவெல – கொரத்தோட்ட பிரதேசத்தில் உள்ள கட்டிடப் பொருட்கள் விற்பனை நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.