Thursday, January 16, 2025
27.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஸ்ரீலங்கன் விமான சேவையின் விலைமனு கோரல் இன்று

ஸ்ரீலங்கன் விமான சேவையின் விலைமனு கோரல் இன்று

ஸ்ரீலங்கன் விமான சேவையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்கான விலைமனுக்கள் இன்று (05) கோரப்படவுள்ளன.

இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை விலைமனுக்களை சமர்ப்பிக்க முடியும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அந்தந்த ஏலங்களை சமர்ப்பித்தல் நேரலையில் செய்யப்பட உள்ளது மற்றும் அதை ஆதரிக்க ஒரு சிறப்பு தொழில்நுட்ப குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

விலைமதிப்பீட்டு அறிக்கையை தயாரித்த பின்னர் அது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முன்மொழியப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles