சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட 9 கிலோ தங்கத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் இன்று (04) காலை இந்த தங்கம் கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்தார்.
குறித்த தங்கத்தை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு வரஉதவிய விமான நிலைய ஊழியர் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.