Monday, June 15, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகராப்பிட்டிய வைத்தியசாலையில் பணிபுரிந்த வைத்தியர் மர்ம மரணம்

கராப்பிட்டிய வைத்தியசாலையில் பணிபுரிந்த வைத்தியர் மர்ம மரணம்

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் எக்ஸ்ரே பிரிவில் பணியாற்றிய வைத்தியர் ஒருவர் அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காலி – தலகஹஹேன பதுமங்க பகுதியைச் சேர்ந்த பிரபாத் சாமர சம்பத் என்ற 37 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த வைத்தியரின் மனைவியும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஆவார்.

சம்பவம் இடம்பெற்ற போது மனைவி வீட்டில் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த வைத்தியரின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய சட்ட வைத்திய பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காலி பொலிஸின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles