பாடசாலை போக்குவரத்து மற்றும் முச்சக்கரவண்டி கட்டணங்களுக்கு விலைச் சூத்திரமொன்றை வழங்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி, அடுத்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு முன்னர், கட்டண மீளாய்வுக் குழு, விலைச் சூத்திரமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.
முச்சக்கர வண்டிகளில் கட்டண டிஸ்பிளே மீட்டர் கட்டாயமாக்கப்பட்டுள்ளது மற்றும் முச்சக்கர வண்டிகளின் விலையை சங்கங்களின் விருப்பத்திற்கேற்ப தீர்மானிப்பதும் பயணிகளை சுரண்டுவதை அகற்றுவதும் இதன் நோக்கமாகும்.