டிஜிட்டல் முறைமைக்கமைய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் ஊடாக வழங்கப்படும் சேவைகள் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளன.
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சகல கிளைகள் ஊடாக வழங்கப்படும் சேவைகளுக்காக டிஜிட்டல் முறைமையின் கீழ் பதிவு செய்து நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.