உலக உடல் பருமன் தினம் இன்று (04) அனுசரிக்கப்படுகிறது.
உடல் பருமன், தொற்று அல்லாத நோய்களின் அபாயத்தை அதிகரிப்பதாக சுகாதாரத் துறைகள் சுட்டிக்காட்டுகின்றன.
உலகின் முதியோர் எண்ணிக்கையில் 1.9 பில்லியனுக்கும் அதிகமானோர் அதிக எடை கொண்டவர்கள் என்றும், அவர்களில் 650 மில்லியன் பேர் உடல் பருமனாக இருப்பதாகவும் சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இந்நிலைமை இந்நாட்டிலும் பாதகமாகவே காணப்படுவதாக தேசிய நீரிழிவு நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் சமூக வைத்திய நிபுணர் சாந்தி குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி இலங்கையில் 2015ஆம் ஆண்டு 34% ஆக இருந்த பருமனானவர்களின் எண்ணிக்கை 2021ஆம் ஆண்டில் 46.7% ஆக அதிகரித்துள்ளது.
உடற்பயிற்சியின்மை, துரித உணவுகளை அதிகமாக உண்பது, அதிக நேரம் உட்கார்ந்து இருப்பது போன்ற உடல் பருமனுக்கு வழிவகுக்கும் என சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.