தம்புள்ளை – ஹபரண பிரதான வீதியின் பெல்வெஹெர பகுதியில் இன்று (04) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருடன் பிக்குணி உட்பட 5 பேர் காயமடைந்துள்ளனர்.
மற்றுமொரு லொறியை கடக்க முற்பட்ட போது, ஹபரணவில் இருந்து வந்த பேருந்து, தம்புள்ளையில் இருந்து ஹபரண நோக்கி வெளிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.