Friday, November 7, 2025
26.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாக்கு நீரிணையை நீந்தி கடந்து சாதனை படைத்த மாணவன்

பாக்கு நீரிணையை நீந்தி கடந்து சாதனை படைத்த மாணவன்

போதைப்பொருள் பாவனையை தவிர்த்தல் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க கோரி திருகோணமலையைச் சேர்ந்த 13 வயதுடைய பாடசாலை மாணவன் பாக்கு நீரினையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

இவர் தமிழ் நாடு தனுஸ்கோடியிலிருந்து நேற்று (1) அதிகாலை நீந்த ஆரம்பித்து தலைமன்னார் வரை நீந்திக் கடந்துள்ளார்.

குறித்த சிறுவனை யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய துணைத் தூதுவர் தலைமன்னாரிற்கு சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இவர் சுமார் 31.05 கிலோமீற்றர் தூரத்தை 8 மணித்தியாலம் 15 நிமிடங்களில் நீந்தி கடந்துள்ளார்.

குறித்த மாணவன் திருகோணமலை மாவட்டத்தில் தி.இ.கி.ச.ஶ்ரீ. கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் கல்வி கற்று வருகின்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles