Monday, March 17, 2025
24 C
Colombo
செய்திகள்உலகம்டாக்காவில் பாரிய தீ விபத்து - 43 பேர் பலி

டாக்காவில் பாரிய தீ விபத்து – 43 பேர் பலி

பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் உள்ள தொடர்மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சுமார் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

டாக்காவின் பெய்லி சாலையில் உள்ள பிரபலமான பிரியாணி உணவகத்தில் நேற்று இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த தீப்பரவல் விரைவில் ஏனைய மாடிகளுக்கும் பரவியதாக தீயணைப்பு சேவை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களின் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பங்களாதேஷ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தீயணைப்பு படையினரினால் பல மணித்தியாலங்களுக்கு பின்னர் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles