Friday, March 14, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டு8 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

8 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

அனுராதபுரத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 8 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படை முல்லைத்தீவு முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் அனுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருவன்வெலிசேய விகாரைக்கு முன்பாக உள்ள வாகன தரிப்பிடத்தில் நேற்று (29) இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

8 இலட்ச ரூபாவுக்கு மேல் பெறுமதியான 4 கிலோ 250 கிராம் கேரள கஞ்சாவை அங்கு விற்பனை செய்ய வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்பிட்டி – அனவாசல பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளுக்காக அவர் அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles