அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக 09 வேப்பமரக் குற்றிகளை ஏற்றிச் சென்ற ஒருவர் நேற்றிரவு கைதடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.