இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதிக்கு யாழ்பாணம் மாவட்ட நீதிமன்றால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி என்.சிறிக்காந்தா தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்கு எதிராக நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு தொடர்பான வழக்கு இன்றையதினம் (29) யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சட்டத்தரணி என்.சிறிக்காந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.