Sunday, July 20, 2025
28.4 C
Colombo
செய்திகள்உலகம்கருக்கலைப்பு உரிமையை அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தியது பிரான்ஸ்

கருக்கலைப்பு உரிமையை அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தியது பிரான்ஸ்

கருக்கலைப்பு உரிமையை அரசியலமைப்புச் சட்டமாக்குவதற்கான முன்மொழிவுக்கு பிரான்ஸ் செனட் ஒப்புதல் அளித்துள்ளது.

நேற்று (28) இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரான்ஸ் பாராளுமன்றத்தின் மேல் சபையான செனட் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீர்மானத்திற்கு ஆதரவாக 267 வாக்குகளும் எதிராக 50 வாக்குகளும் கிடைத்துள்ளன.

1974 ஆம் ஆண்டு முதல் பிரான்சில் கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக உள்ளது மற்றும் அரசியலமைப்பின் மூலம் அதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த திட்டம் முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பான தீர்மானம் ஐந்தில் மூன்று பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதால் வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles