நீர்கொழும்பு – கிம்புலாபிட்டிய – வெரெல்லவத்த பகுதியில் பபட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரிந்த 18, 22 மற்றும் 31 வயதுடைய மூவர் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பின்னர் அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதன்போது சித்தம்பலன்வத்தைஇ பொத்துக்குளம்இ பள்ளம பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய ரன்பதி தேவகே இசுரு மதுஷான் என்பவரே உயிரிழந்துள்ளார்.
ஏனைய இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்களில் ஒருவர் இன்று (28) அதிகாலை உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
கிம்புலாபிட்டிய, கல்மங்கட வத்த பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய அஷான் நவரத்ன என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.