மாணவர்களை நீண்ட நேரம்திறந்த வெளியில் இருக்க அனுமதிக்க வேண்டாம் என அனைத்து பாடசாலை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நிலவும் அதிக வளிமண்டல வெப்பநிலை இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.