ரஷ்யாவுக்கு ஆதரவாக பெலாரஸ் படைகள் யுக்ரைனின் வடக்கு பகுதி வழியாக நுழைந்து தாக்குதல் நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் யுக்ரைனுக்கு இராணுவ உதவிகளை வழங்கி வருவதால் ரஷ்யாவுக்கு ஆதரவாக பெலாரஸ் களம் இறங்கலாம் என அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், ரஷ்யாவுக்கு ஆதரவாக யுக்ரைனின் வடக்கு பகுதி வழியாக பெலாரஸ் படைகள் யுக்ரைனுக்குள் நுழைந்துள்ளதாக யுக்ரைன் நாடாளுமன்ற செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் யுக்ரைன் மற்றும் ரஷ்யா பிரதிநிதிகளுக்கு இடையில் பெலாரஸில் அமைதி பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.