களுத்துறை தேசிய சுகாதார நிறுவகம் மற்றும் பேருவளை வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பரிசோதகர்களினால் நேற்று (27) இரவு களுத்துறை நகரில் உள்ள உணவகங்கள் மற்றும் கடைகள் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
களுத்துறை நகரில் உள்ள உணவகங்கள் சுகாதார விதிகளை மீறி வியாபாரம் செய்வதாக களுத்துறை தேசிய சுகாதார நிறுவகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உணவகங்களில் உணவை சரியாக பொதியிடாமை, குளிர்சாதன பெட்டிகளில் உணவுகளை சரியாக வைக்காமை, உணவு உற்பத்திக்கு தேவையான பொருட்களை சரியாக பொதியிடாமை, உணவின் மீது முறையான காலாவதி திகதிகள் ஒட்டப்படாமை ஆகிய குற்றங்களுக்காக சுமார் 10 உணவகங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், தரமற்ற உணவுப் பொருட்கள் பொதுச் சுகாதார பரிசோதகரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதுடன், உணவகங்களை முறையாக நடத்தாத கடை உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.