Thursday, January 16, 2025
29.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் காலமானார்

ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் காலமானார்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை பெற்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த சாந்தன், உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்.

சென்னை ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில், அவர் இன்று (28) காலமானதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில் விடுவிக்கப்பட்டார்.

அவருக்கு கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் திகதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திருச்சி அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

கோமா நிலைக்கு சென்ற சாந்தனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சாந்தன் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை வர இந்திய அரசு அவருக்கு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles