காஸா வன்முறையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் “காஸா சிறுவர்களுக்கான நிதியம்” திட்டத்தை உருவாக்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இதற்கமைய அனைத்து அமைச்சுக்கள் மற்றும் அரசு நிறுவனங்களும் இப்தார் கொண்டாட்டங்களைத் தவிர்த்து இந்த நிதியத்திற்கு பங்களிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிதியத்தின் மூலம் கிடைக்கப் பெறும் அரசாங்கத்தின் நன்கொடையான ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை ஐக்கிய நாடுகள் வதிவிட பிரதிநிதிகள் ஊடாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதோடு பொது மக்களின் பங்களிப்பும் இந்த நிதியத்திற்கு எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.